Tuesday, January 2, 2018

வீட்டில் செல்வம் பெருக நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்…!!!

நம்முடைய வீட்டில் எவ்வளவு தான் சேமித்து வைத்தாலும் செல்வம் தங்குவதில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? அதற்கும் சில பரிகாரங்கள் உண்டு.
இந்த பரிகாரங்களை எல்லா நாள்களிலும் செய்யலாம். இதற்கென தனியே கால நேரம் பார்க்கத்  தேவையில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி இடைவெளியில் இதைச் செய்தால் பலன்  சிறப்பாக கிடைக்கும்.

ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசியை (safty pin) ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.


இதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிக்கொண்டு, பின் அந்த கின்னத்தை மூடாமல், திறந்திருக்கும்படி வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் வைக்க வேண்டும்.
தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்தால் பலன் இரட்டிப்பாகும்.
இதை தினமும் 2 நிமிடமாவது தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், அன்றாடம் உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
அந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். இதை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வாழ்நாள் முழுவதும் கூட இதை கடைபிடிக்கலாம்.
இவ்வாறு செய்து வருவதால் வீட்டில் வளமும் செல்வமும் அதிகரிக்கும்.

Friday, March 13, 2015

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!
பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்ப...ிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும்
சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம் பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன. இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்
விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: மூலபத்திரம் ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.
23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....
சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதுமானது அல்ல: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பட்டா மாறுதல்
பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,
* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.
* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.
* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.
* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.
இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.
தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது. இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.
மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.
ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.
'அ' பதிவேட்டில் இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.
பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision) ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந),புன்செய் (பு),மானாவாரி (மா),தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர் நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். நன்றி http://patta-chitta.blogspot.in/2013_07_01_archive.html பட்டாவில் உள்ள குறைகளை சரி செய்வது எப்படி
பட்டாவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும்
வட்டாட்சியர் முடிவில் திருப்தி இல்லையெனில் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யுங்க
சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக பட்டா மாறுதல்
சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும் போதே பட்டா மாறுதல் பட்டா உட்பிரிவு செய்தல் ஆகியவற்றிற்கும் கட்டணம் மனு ஆகியவை பெறப்படும் அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பார்கள்
அதன் அடிபடையில் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும் ஆனால் நடைமுறையில் பட்டா மாறுதல் மட்டும் செய்யப்படுவதில்லை. நன்றி - மோகன்தாஸ் சாமுவேல்

Thursday, January 22, 2015

நூறு ஏக்கருக்கு… இரண்டே வேலையாள்..



நூறு ஏக்கருக்கு… இரண்டே வேலையாள்..
இதோ, ஓர் அதிசய இயற்கைப் பண்ணை!
ஏக்கருக்கு 42 மரங்கள். இடுபொருட்களே தேவையில்லை.
...
களையெடுக்கும் கால்நடைகள்.
காவேரிராஜபுரம்… அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், கரடுமாக இருந்த ஊரில், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மாந்தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பருவத்தில் தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் பெரிய அளவு இல்லை. அதேகதைதான் இங்குள்ள பெரும்பாலான மாந்தோட்டங்களிலும். ஆனால், ‘லியோ இயற்கை வேளாண் பண்ணை’யில் மட்டும் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. காரணம்… ”முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே நான் பராமரிக்கறதுதாங்க” என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார், பண்ணைக்குச் சொந்தக்காரர்களில் ஒருவரான பாரதி!
தோட்டத்துக்குள் நடைபோட்டால்… அடுத்தடுத்து ஆச்சரியங்கள் நம்மைத் தாக்கி, விழிகளை விரிய வைக்கின்றன. ஆம்… பண்ணைக்குள் நுழைபவர்களை, உள்ளே இருப்பவர்களுக்கு தெரிவிப்பதற்காக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒளிப்படக் கருவிகள் (குளோஸ்டு சர்க்யூட் கேமராக்கள்); வேலியிலிருக்கும் முள்செடிகளை கவாத்து செய்து கொண்டிருக்கும் ராஜஸ்தான் ஒட்டகம்; மாம்பழங்களைச் சுமந்துச் செல்லும் கழுதைகள்; தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக பராமரிக்கப்படும் குதிரைகள், சுதந்திரமாக மேய்ந்துக் கொண்டிருக்கும் செம்மறி, ஜமுனாபாரி உள்ளிட்ட வகைவகையான ஆட்டுக் கூட்டம்; பழத்தோட்டத்தில் உள்ள களைகளை காலி செய்து கொண்டிருக்கும் வாத்துகள், வான்கோழிகள் மற்றும் நாட்டுக் கோழிகள்; இயற்கை இடுபொருட்களைத் தருவதற்கென்றே வளர்க்கப்படும் காங்கிரேஜ், தார்பாக்கர் உள்ளிட்ட நாட்டுஇன மாடுகள்... என திரும்பிய பக்கமெல்லாம் ஆச்சரியம்தான்!
மாட்டு எரு மட்டும்தான் மாங்கன்னுக்கு!
”இது, எங்க குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை. என் தம்பி சரவணனுக்கும் இந்தப் பண்ணையில ரொம்ப ஆர்வம் உண்டு. அதனலதான் 12 வருஷத்துல இந்த அளவுக்கு இதை நாங்க வளர்த்தெடுத்திருக்கோம். ஐ.டி.ஐ. படிச்சிட்டு, ஆட்டோமொபைல் வேலை செய்துக்கிட்டு இருந்தேன். அதுல வருமானம் இருந்தாலும், போதுமான அளவுக்கு மனநிறைவு கிடைக்கல. அந்த நேரத்துலதான் இந்த நிலத்தை வாங்கினோம். நிலத்தை யார் பராமரிக்கறதுனு கேள்வி வந்தப்ப… நானே பொறுப்பை ஏத்துக்கிட்டேன். கல்லும், கரடுமாக் கிடந்த இடத்தை சரி செஞ்சி, மாஞ்செடி நட்டு வெச்சோம். ஆரம்பத்துல குடத்துல தண்ணி எடுத்து ஊத்தித்தான் மாங்கன்னை காப்பாத்தினோம். செடி நடும்போது, ‘மாட்டு எரு மட்டும் போட்டா போதும்’னு சொன்னாங்க. அதைத்தான் செஞ்சோம். ஆனா, இயற்கை விவசாயம்கிறத பத்தி எதுவுமே அப்ப எங்களுக்குத் தெரியாது.
நோய்களுக்கு காரணம் ரசாயனம்!
எங்களுக்கு ஒரு அண்ணன் உண்டு. தோட்ட வேலைகள் ஒரு பக்கம் நடந்துக்கிட்டிருக்க… அவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்தப்ப… ‘அது, வேலை செய்யல, இது வேலை செய்யலை’னு சொல்லி எல்லாத்துக்கும் ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. ஆனா, அவரைக் காப்பாத்த முடியல. ஆஸ்பத்திரியில இருந்தப்ப…
‘இப்பல்லாம் இப்படி கண்ட கண்ட நோய்ங்க ஆட்டிப் படைக்குது. இதுக்கெல்லாம் காரணமே விவசாயத்துல பயன்படுத்துற ரசாயன உரம், பூச்சிக்கொல்லிங்கதான்’னு டாக்டருங்க பேசிக்கிட்டதைக் கேட்டேன். அதுக்குப் பிறகுதான், ‘ஏற்கெனவே நாம ரசாயனம் எதையும் பயன்படுத்தல… இனியும் துளிகூட ரசாயனத்தைத் தோட்டத்துல போட்டுடக்கூடாது’னு முடிவு செஞ்சேன். அத்தோட… இயற்கை விவசாயத்தைப் பத்தி தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், ‘வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர்… போன்றவங்களோட பயிற்சி வகுப்புகள்ல கலந்துகிட்டேன். இயற்கையை எப்படி அணுகறதுங்கற வித்தையை இந்த ரெண்டு பேருகிட்டத்தான் முழுசா கத்துக்கிட்டேன்” என்று சொல்லும் பாரதி, தற்போது தன்னுடைய தோட்டத்து மாமரங்களுக்கு இடுபொருட்கள் என்று எதையுமே கொடுப்பதில்லை!
எந்த இடுபொருளும் கொடுக்க வேண்டாம்!
”மாட்டு எரு, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு எல்லாத்தையும் ரெண்டு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். இப்போ எதையுமே பயன்படுத்துறது இல்லை. அதுக்குக் காரணம்… திருவண்ணாமலையில நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புதான். சுபாஷ் பாலேக்கர் ஐயாகிட்ட, என் பண்ணையோட போட்டோக்களைக் காட்டினேன். ‘ரொம்ப நல்லா இருக்கு, மண்ணுல நுண்ணுயிரும், மண்புழுவும் வளர்ந்துட்டா எந்த இடுபொருளும் கொடுக்க வேணாம். நீங்க சொல்றத வெச்சு பார்க்கறப்ப… ஏறத்தாழ உங்களோட பண்ணையில நுண்ணுயிர்களும், மண்புழுவும் வேலை செய்ய தொடங்கிடுச்சி போல’னு சொன்னாரு. அவர் சொன்ன மாதிரியே என்னோட பண்ணையில எந்த இடத்துல தோண்டினாலும் மண்புழுவைப் பார்க்க முடியும். அதனாலயே இடுபொருள்னு எதையும் கொடுக்கத் தேவையில்லங்கற முடிவுக்கு வந்தேன்” என்ற பாரதி… ”இதோ பாருங்க… மண்புழுங்க, தோட்டம் முழுக்க உரத்தை தள்ளியிருக்கறத…” என்றபடியே குஷியோடு சுட்டிக்காட்டிவிட்டு,
எங்கள் குலதெய்வம் மண்புழு!
”இந்த மண்புழுங்க தோட்டம் முழுக்க இப்படி வேலை செய்றதால… பூமி முழுக்க ஓட்டை ஓட்டையா இருக்கு. இதனால வேர்களுக்கு அப்பப்ப காத்துப் போறதோட… மழை பெஞ்சா சொட்டு தண்ணிகூட வீணாகாமா நிலத்துல இறங்கிடுது. இப்படி இயற்கை உரத்தையும் கொடுத்து, மழைநீரையும் அறுவடை செய்யறதுக்கு உதவியா இருக்கற மண்புழுவை குலத்தெய்வம் கணக்காக நாங்க கும்பிடுறோம்” என்று கையெடுத்துக் கும்பிட்டார் பாரதி.
இரண்டே வேலையாட்கள்!
அருகில் இருந்த மா மரத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதில் செந்தூரா மாம்பழத்தைப் பறித்து சுவைக்கச் சொன்னார். அலாதியான அந்தச் சுவையும் மணமும்… வீட்டுக்குப் பின்புறத்தில், யாருமே உரம் போடாமல் வளர்ந்திருந்த ஒற்றை மாமரத்தில், சின்னவயதில் ஏறிப் பறித்துச் சாப்பிட்ட பழத்தின் நினைவு வந்து மோதியது!
”இயற்கை உரமோ, பூச்சிவிரட்டியோ… எதுவும் இந்த வருஷம் கொடுக்கல ஆனா, விளைச்சல் மட்டும் நிறைவா இருக்கு. ‘ஜப்பான் இயற்கை வேளாண் விஞ்ஞானி’ மசானோபு ஃபுகோக்கா, ‘இயற்கை விவசாயம்னா… விதைக்கணும், அறுக்கணும். இதைத் தவிர வேற எந்தப் பாராமரிப்பும் செய்யக்கூடாது’னுதான் சொல்லியிருக்கிறாரு. அதைத்தான் உழவு செய்யாத வேளாண்மைனு (டூ நத்திங் ஃபார்ம்) சொல்லுவாங்க. எங்க பண்ணையில இப்ப அறுவடை மட்டும்தான் செய்றோம். சொன்னா நம்பமாட்டீங்க… இந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பண்ணையில, ரெண்டு பேர் மட்டும்தான் வேலை செய்றோம். ஒண்ணு நான், ரெண்டாவது பண்ணை மேனேஜர். ஒட்டுமொத்த பண்ணையும் இயற்கையோட கட்டுப்பாட்டுல வந்ததுதான் இதுக்குக் காரணம். சில்லரை வேலைகள செய்ய குதிரை, கழுதை, ஒட்டகம்… உதவி செய்துங்க. அதனால எங்களுக்கே இங்க பெரிசா எந்த வேலையும் இல்ல. பழ சீஸன்ல மட்டும் ஒண்ணு ரெண்டு ஆட்களைக் கூட சேர்த்துக்குவோம்.
களையெடுக்கும் ஆடுகள்!
கோடைக் காலத்துல மரங்க வாடாமா இருக்கணும். அதுக்காக எல்லா மரத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனம் போட்டிருக்கோம். மா மரத்துக்கு பக்கத்துல வளர்ற களையைக் கட்டுப்படுத்த உழவு ஓட்டிப்போடுங்கனு சிலர் சொல்றாங்க. ஆனா, இங்க வளர்ற 150 ஆடுகளே களையையெல்லாம் தின்னுடறதோட… சத்தான உரத்தையும் மரங்களைச் சுத்தி போட்டுடுதுங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்ன வாங்கின 40 ஆடுகதான், இப்போ 150 உருப்படியா பெருகி நிக்குதுங்க.
காங்கிரேஜ், தார்பார்க்கர்னு நாட்டுரக மாடுங்களும் நாலைஞ்சு இருக்குது. ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா இதுக்காகத்தான் அதையெல்லாம் வாங்கிட்டு வந்தேன். இப்ப அந்தத் தேவையும் பூர்த்தியானதால மாடுங்க சும்மாத்தான் நிக்குதுங்க. அதுங்ககிட்டேயிருந்து பாலையும் கறக்கறதில்ல. எல்லாத்தையும் கன்னுக்குட்டிங்களே குடிச்சுடும். அதனாலதான் இந்த கன்னுங்க எல்லாம் தெம்பா இருக்குது” என்று சொல்லி அவற்றைத் தடவிக் கொடுத்தவர், மா சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் வரவு-செலவு பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
வருமானம் இல்ல… லாபம்!
”ஏக்கருக்கு 30 அடிக்கு 30 அடி இடைவெளியில 40 மரங்கள் வெச்சிருக்கோம். பங்கனப்பள்ளி, அல்போன்சா, செந்தூரா, ஜவாரி, மல்கோவானு விதம்விதமான ரகங்கள நடவு செய்திருக்கோம். சராசரியா ஒரு மரத்துக்கு 150 கிலோ மகசூல் கிடைக்கும். 10 மரத்துல மகசூல் முன்ன, பின்ன இருந்தாலும்… சராசரியா ஏக்கருக்கு 4,500 கிலோ கிடைக்கும். இருக்கறதுலயே விலை குறைவான செந்தூரா ரகம்… கிலோ 30 ரூபாய்; பங்கனப்பள்ளி கிலோ 60 ரூபாய்; அல்போன்சா கிலோ 70 ரூபாய்னு விற்பனையாகுது. குறைந்தபட்சம் கிலோ 30 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும் ஏக்கருக்கு 1,35,000 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதை வருமானம்னு சொல்றதைக் காட்டிலும், லாபம்னுதான் சொல்லணும். ஏன்னா… ஆரம்பக் கட்டத்துல நடவு, சொட்டுநீர் இதுக்காக செய்ததைத் தவிர, இந்த 12 வருஷத்துல பெருசா செலவு இல்லையே” என்ற பாரதி,
”இப்படி, எந்த சிரமமும் இல்லாம லாபம் மட்டுமே கிடைக்கறதோட… நஞ்சு இல்லாத விளைபொருளும் கிடைக்கறப்ப… ஏன் எல்லா விவசாயிங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறக்கூடாது?” எனக் கேட்டுவிட்டு,
”என்னோட அனுபவத்துல தெரிஞ்சிக்கிட்ட இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தை மற்றவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கத் தயாரா இருக்கேன். பண்ணையிலேயே வந்து தங்கி எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு போகலாம். சாப்பாட்டுக்கும், தங்கறதுக்கும்கூட பணம் வேண்டாம். இயற்கை அன்னை எனக்கு போதுமான செல்வத்தை அள்ளிக் கொடுக்கறா… அதிலிருந்து கொஞ்சமாவது, மத்த விவசாயிங்களுக்கும் கொடுக்கிறதுதானே நியாயம்” என்று தத்துவார்த்தமாக சொன்னார்!
பரந்து விரிந்து கிடக்கும், இந்தப் பண்ணையை நிர்வகிக்கும் பாரதி… ஒரு மாற்றுத் திறனாளி. போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், தோட்டத்துக்குள் துள்ளல் நடைபோட்டு சாதித்திருக்கும் பாரதியை பார்க்கும்போது, விண்ணை முட்டுகிறது வியப்பு. உங்களுக்கும்தானே!
வேலியைப் பராமரிக்கும் ஒட்டகம்!
காலையில் பண்ணையில் நுழைந்தபோது வேலி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தது ஒட்டகம். மாலை திரும்பும்போது பார்த்தால்… பல நூறு மீட்டர் தூரத்துக்கு வேலியில் இருந்த புல், பூண்டு, முள்… என்று சகலத்தையும் தின்று தீர்த்து, வேலியையே சுத்தப்படுத்தி வைத்திருந்தது ஒட்டகம்.
”ராஜஸ்தான் போனப்ப ஒட்டகச் சந்தை பக்கம் எட்டிப் பார்த்தேன். ஏற்கெனவே நம்மகிட்ட குதிரை, கழுதையெல்லாம் இருக்கு… ஒரு ஒட்டகத்தையும் அதுங்ககூட சேர்த்துவிடலாம்னு ஆசைப்பட்டு, விலைக்கு வாங்கிட்டு வந்தேன். ‘இதைப் போய் எதுக்காக வாங்கிட்டு வந்திருக்கான்?’னு ஆளாளுக்கு பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நான் எந்த பதிலையும் சொல்லல.
ஆனா, நானே ஆச்சரியப்படுற அளவுக்கு அந்த ஒட்டகத்தோட வேலை அமைஞ்சதுதான் ஆச்சரியம். அதுக்கு என்ன மாதிரி தீனி கொடுக்கறதுனுகூட சரியா தெரிஞ்சுக்காத நான், ஒரு நாள் தோட்டத்துல அதை விட்டுட்டு வேடிக்கை பார்த்திட்டிருந்தேன். அதுவா போய் வேலியில இருக்கிற முள்செடி எல்லாத்தையும் அழகாக கடிச்சி திங்க ஆரம்பிச்சுடுச்சி. ‘அட, வேலி முள்ளையெல்லாம் இப்படி அழகா கழிச்சு எடுத்துடுச்சே… இதுக்காக வேலையாள் வெச்சா எவ்வளவு செலவாகியிருக்கும்? ஆயிரக்கணக்குல கூலிக் கொடுத்தாகூட வேலி முள்ளை வெட்ட ஆள் கிடைக்காத நிலையில, இது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்’னு அசந்து போனேன். ஆரம்பத்துல என்கிட்ட கேள்வி எழுப்பினவங்கள்லாம்கூட மூக்குல விரல் வெச்சுட்டாங்க.
இப்ப… புல், பூண்டு, முள்ளு’னு எதையும் விடாம தின்னு, பண்ணையைப் பாதுகாக்கற தளபதிகள்ல இந்த ஒட்டகமும் ஒரு ஆளாயிடுச்சு” என்று ஆச்சரியத் தகவல் சொன்னார் பாரதி.
வாருங்கள்… பறியுங்கள்… சுவையுங்கள்!
இந்தத் தோட்டத்திலிருந்து நேரடியாக வியாபாரிகளுக்குப் பழங்கள் விற்கப்படுவதைவிட, பொதுமக்களே நேரடியாக வந்து வாங்கிச் செல்வதுதான் அதிகமாக இருக்கிறது.
”எங்க தோட்டத்துல பழம் வந்துடுச்சுனு தெரிஞ்சாலே… அக்கம், பக்கம் மட்டுமில்லாம, சென்னையில இருந்தெல்லாம்கூட மக்கள் நேரடியா குடும்பத்தோட வர ஆரம்பிச்சுடுவாங்க. மரத்துல இருந்து அவங்களே பறிச்சி சாப்பிடுவாங்க. தேவையான அளவுக்கு பறிச்சு பையில எடுத்துக்குவாங்க. இங்க சாப்பிடற பழத்துக்கெல்லாம் பணம் வாங்கறதில்ல. எடுத்துக்கிட்டு போற பழங்களுக்கு மட்டும் எடைபோட்டு பணம் வாங்குவோம். அதுவும்கூட மொத்த விலைக்குத்தான்.
குடும்பத்தோட வர்ற சிலர், சாப்பாடெல்லாம் எடுத்துட்டு வந்து, மரத்தடியிலேயே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு, குதிரை, ஒட்டகத்துலயெல்லாம் சவாரி பண்ணிட்டு, சாயந்திரமா புறப்பட்டுப் போறதும் உண்டு. இதுல குழந்தைங்க… பெரியவங்கனு வித்தியாசமே இல்லை!” என்று சொல்லி சிரிக்கிறார், பாரதி.
காவல் காக்கும் கேமரா!
தோட்டத்தில் இரண்டு இடங்களில் உயரமான இரும்புக் கம்பங்களை நிறுவி, அவற்றில் ஒளிப்படக் கருவிகளை அமைத்திருக்கிறார், பாரதி. இதன் மூலம் பண்ணையிலிருக்கும் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, மொத்தத் தோட்டத்தையும் தொலைக்காட்சிப் பெட்டி மூலம் பார்க்க முடியும். அங்கே நடப்பவை அத்தனையும் அந்தந்த நொடியே ஒளிப்படக்கருவி மூலம் பதிவும் ஆகிவிடுகிறது.
”மாசத்துல 30 நாள் வரைக்கும் இப்படி பதிவு பண்ணிக்கலாம். தேவையான படத்தை, கம்ப்யூட்டர்லயோ… சிடி-யிலயோ பதிவு பண்ணிட்டு, அழிச்சிட்டா… அடுத்த முப்பது நாளைக்கு மறுபடியும் பதிவு பண்ணிக்கலாம்.எங்க வீடு இருக்கறது திருநின்றவூர்ல. இங்க இருந்து கிட்டத்தட்ட முப்பது, நாப்பது கிலோ மீட்டர் தூரமிருக்கும். இந்த கேமராவுல பதிவாகற விஷயத்தை இன்டர்நெட் மூலமா வீட்டுல இருந்தே பார்க்கிறதுக்கு ஏற்பாடு நடக்குது. மொத்தம் நாலு லட்ச ரூபாய் இதுக்காகவே செலவு பண்ணியிருக்கோம். ஆளுங்களோட நடமாட்டம்… எங்களோட ஆடு, மாடு, கழுதை, குதிரை, ஒட்டகம் இதுங்களோட நடமாட்டம்னு எல்லாத்தையும் இதன் மூலமாவே கண்காணிக்க முடியுது. அதனால எங்க தோட்டத்துக்குனு தனியா காவலாளியே தேவைப்படல” என்கிறார் பாரதி மகிழ்ச்சியாக.
தொடர்புக்கு
பாரதி, அலைபேசி: 93805-33376.

பட்டுபட்டா தோசை, மல்லிகைப்பூ இட்லி

பட்டுபட்டா தோசை, மல்லிகைப்பூ இட்லி
ரவா தோசைக்கு அரிசி மாவை விட அரிசியை ஊறவைத்து மிக்ஸியில் நைஸôக அரைத்து அத்துடன் ரவா, மைதா கலந்து தோசை வார்த்தால் தோசை கல்லிலிருந்து தானாகவே எழும்புவது போல் நன்றாக வரும். அதிக நேரமும் வேகாது. சட்டென வார்த்துவிடலாம்.
தோசை மாவில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து வார்த்தால் தோசை மிகவும் சுவையாக இருக்கும்.
...
தேன்குழலுக்கு அரைத்தமாவு மீந்துவிட்டால் அதைக் கரைத்து உப்பு, சீரகம், கரிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால் பட்டு, பட்டாக தோசை வரும்.
மொறு மொறு தோசைக்கு, ஒரு பிடி பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்து தோசைமாவுடன் கலந்து வார்த்தால் சூப்பர் பேப்பர் ரோஸ்ட் தயார். கல்லில் ஒட்டாது. எண்ணெய் குடிக்காது.
ஒவ்வொரு முறையும் தோசை ஊற்றுவதற்கு முன்பாக தோசைக்கல்லில் தண்ணீர் தெளித்து துடைத்துவிட்டு ஊற்றினால் தோசை கருகாது.
இட்லி கெட்டியாக இருக்கிறதா? நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து அதற்குபின் இட்லி வார்த்துப் பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
இட்லிமாவில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு இட்லி அவித்தால் பூப்போல வரும்.
ஸ்பெஷல் இட்லி செய்ய விருப்பமா? கோதுமை ரவை ஓர் ஆழாக்கை ஊறவைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அத்துடன் அரை ஆழாக்கு உளுந்தையும் சேர்த்து இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, நாலு பட்டாணி, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து இட்லி வார்த்தால் சூப்பர் சுவையாக இருக்கும்.
இட்லிக்கு ஊறவைக்கும் போது அரிசியை நன்கு களைந்துவிட்டு வெதுவெதுப்பான வெந்நீரில் ஊறவைத்தால் இட்லி மெத்தென்று இருக்கும்.

Tuesday, December 9, 2014

குங்குமம் தயாரிப்பது எப்படி

மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்க கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்க வேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும். www.puradsifm.com
இக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி. குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது.தலை வகிட்டுமுனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.நெற்றியில் புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.
நெற்றியின் புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.இதனைநெற்றிக்கண் எனலாம்.இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.
அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.
குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.
இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.
நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
மின்கடத்தும் தன்மைநமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடு தான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன. 

Wednesday, September 17, 2014

மைதா- வெள்ளை விஷம்

பெரும்பாலானோரின் காலை மற்றும் இரவு உணவில் தவறாமல் இடம் பிடித்துவிட்ட ஒரு விஷம் தான் மைதா.
நூடுல்ஸ், பரோட்டா, பாஸ்தா, பர்கர் முதல் பேக்கரி ஐட்டங்கள் வரை எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு பொருள். விளம்பரங்களில் வைட்டமின்கள் உள்ளது, மினரல்கள் உள்ளது என்றெல்லாம் சொல்லப்படும் உணவுகளில் எல்லாம் அவர்கள் சொல்வது போல வைட்டமின்களும் மினரல்களும் இருக்கிறதோ இல்லையோ மைதா இருக்கிறது.
இந்த மைதாவை நாம் ஏன் வெள்ளை விஷம் என்று சொல்கிறோம்??
இந்தியாவில் தான் அதிகமாக மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; மைதா மாவில் சத்துப் பொருட்கள் கிடையாது. மஞ்சள் நிறத்தில் வெளி வரும் மைதாவை பளிச்சென்று வெள்ளை நிறம் வருவதற்கு போடப்படும் இரசாயனம் என்வென்று தெரிந்தால் பதறித்தான் போவோம். மைதாவில் சேர்க்கப்படும் இரசாயனங்கள் முறையே சோடியம் மெட்டா பை சல்பேட்(sodium meta bi sulphate), பென்சாயிக்(benzoic), சிட்ரிக் அமிலம்(citric acid), அல்லோக்சான் (Alloxen) (அ) குளோரின் டை ஆக்ஸைடுடின் என சேர்க்கப்படும் இரசாயன பொருட்கள் அனைத்துமே மனித வாழ்க்கையை அழிக்க வந்தவைகள் என்றாலும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களையும், குழந்தைகளையும் மோசமான விளைவுகளை சந்திக்க வைக்கும்.
கோதுமையை நன்கு தீட்டி அரைக்கப்படும் மாவே மைதா. மாவு அரைக்க கோதுமையை தீட்டும்போதே, 76 சதவீத வைட்டமின்களும், தாதுப் பொருட்களும், 97 சதவீதம் நார் சத்தும் போவதால் உணவு எளிதில் செரிமானம் ஆகாது.
மைதா மாவை மிருதுவாக்க சேர்க்கப்படும் அல்லோக்சான் (Alloxen) (அ) குளோரின் டை ஆக்ஸைடுடின் எனும் வேதிப்பொருள், வேதியியல் ஆய்வின்படி கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்து விடுகிறது. கணையம் செயலிழந்து சர்க்கரை நோய் உண்டாக்குகிறது. பென்சாயில் பெராக்சைடு (Benzoyl Perozide) எனும் வேதிப் பொருள் தலைமுடியை கருப்பாக்க ஹேர் டையில் சேர்க்கப்படுவதுடன் துணிகள் உற்பத்தி செய்யும் ஆலைகளில் துணி நிறம் மாற்ற உபயோகப்படுத்தப்படுகிறது. இது பிரிராடிகல் எனப்படும் புற்றுநோய் தோற்றுவிக்கும் காரணியாகவும் செயல்படுகிறது. இந்த பவுடர் கொஞ்சம் எடுத்து நீரில் கலந்தால் தீப்பொறிகள் தோன்றும். நம் தோலை பாதிக்கும் தன்மை கொண்டது. இத்தனை மோசமான இரசாயனங்கள் தான் நாம் உணவில் பெருகி வருகின்ற இதயநோய் மற்றும் கேன்சருக்கு அவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் மைதாவில் உள்ள அலாக்சான் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக உள்ளது.
பொதுவாக பேக்கரியே தீங்கு விளைவிக்க கூடிய இரசாயனங்களின் கூடம் தான் . பேக்கரி தொழில் செய்பவர்களை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லச்சொன்னால் அவர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்... ஆனால் வியாபாரம் என்று வரும்போது நாடாவது, மக்களாவது. நலன் என்பதை விட பணம் என்ற ஒன்றின் பின்னால் நாடே செல்லும் போது அவர்கள் மட்டும் எம்மாத்திரம். 90% சதவீதம் பேக்கரியில் செய்யப்படும் உணவு வகைகள் அனைத்துமே மைதவால் தான் உருவாகின்றன.
பரோட்டா, ஃஃபிரைட் ரைஸ், சூப், நூடுல்ஸ், பர்கர், பீசா இன்னும் நம் வாய்க்குள் நுழையாத ஃபாஸ்ட்புட் அனைத்து உணவுப் பொருட்களிலும் மைதா தான் உபயோகிக்கிறார்கள். பேக்கரியில் தயாராகும் பிரட், பிஸ்கட், சமோசா, ஃபப்ஸ், அனைத்து வகை கேக்குகளும் மைதாவால் ஆனது தான்.
வெறும் மைதா, தண்ணியை மட்டும் சேர்த்து செய்தால் அந்த உணவுப்பொருளில் சுவை கிடைக்காது. அதனால் ஏற்கெனவே விஷமான மைதாவுடன் மேலும் மேலும் விஷம் சேர்க்கப்படுகிறது.
தயாரிக்கும் உணவுக்கு ஏற்ப, பலவகையான கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. சுவையூட்ட சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் முறையே பெயிண்ட் உற்பத்திக்கு தேவையான பெட்ரோலியம் பை ப்ராடுக்ட்ஸ், மினரல் ஆயில்(mineral oil), சுவைகூட்டிகள், அஜினோமோட்டோ, பதப்படுத்திகள்(preservative), டால்டா, சாக்கரின் (500 மடங்கு இனிப்பு சுவையை கூட்டும் இரசாயனம்) என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
இப்படி பட்ட பல வேதிப்பொருட்களை சேர்த்தால் தான் சுவையே கிடைக்கும். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு கூடும். சர்க்கரை நோய், இதய நோய் வரும். இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், இன்சுலினை உற்பத்தி செய்து சீராக வெளியிடும் பீட்டா செல்லை சேதப்படுத்தும். மேலும் கணையத்தை பாதிக்கும். பல முக்கியமான வேலைகளை செய்யும் கணையம் பாதிக்கப்பட்டால் அவர்களை நீரிழிவு நோய் தாக்கும். உடல் எடை அளவில்லாமல் கூட்டும். மைதா உணவை உட்கொள்ள உட்கொள்ள இடுப்பின் சுற்றளவு அதிகரிக்கும்...
சர்க்கரை நோயாளிகளை கோமா நிலைக்கு கொண்டுசெல்லும் ஆற்றல் பெற்றது இந்த மைதா! இதய நோய்கள், சிறுநீரக கல், குருட்டுத்தன்மை, மூட்டு ஊனம்(limb amputation) என மிக மோசமான வியாதிகளின் சொந்தக்காரர் தான் நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்து விட்ட மைதா.
கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்டு கோதுமை மாவை விட கோதுமையை நாமே வாங்கி அரைப்பது தான் சிறந்தது. . உணவில் கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, வரகு, குதிரைவாலி, எள், சிகப்பு அரிசி, பெருங்காயம், கசகசா போன்ற பொருட்கள் எல்லாம் உடலை வலுவாக்கியது. வாழ்வும் தந்தது. உணவு பழக்க வழக்கம் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் பெருகிவரும் நீரழிவு மற்றும் இதய நோய்க்கு காரணங்கள் பற்றி ஆய்வுகள் இப்படி உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளும் நமது வாழ்க்கைக்கு எதிரியாக மாறுவதை உறுதிப்படுத்துகின்றன.
மேலும் இன்றைய சமுதாயத்தை அழித்து கொண்டும் வருகிறது மைதா. ஆரோக்கியமான நம் பாரம்பரிய உணவு வகைகளை உட்கொண்டு விஷத்தன்மை வாய்ந்த பரோட்டாவை புறம் தள்ளுவோம். தொன்று தொட்டு தமிழக மக்களின் உணவு பழக்கம் உணவே மருந்து என்ற நிலை மாறி வெளிநாட்டு உணவு முறையால் உணவே எமன் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றோம். நம்முள் நமக்கே தெரியாமல் விஷத்தை கலக்கும் மைதா உணவை அறவே தவிர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்.

Saturday, August 30, 2014

இந்த மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா ???

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும்
ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக
ஒத்து கொண்டுள்ளார்கள்.
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும்
கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ
கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு
தெரிவித்துள்ளதா???
VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம்
என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்,
நமது நாட்டில், அது நாள் முழுவதும்
தொலைக்காட்சியில்
விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
_____________________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு
தெரிவித்துள்ளதா???
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல,
மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால்,
அது ஒரு cabolic சோப்பு,
மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது.
ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட
பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ?
மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?

உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு
தெரிவித்துள்ளதா???
COKE மற்றும் PEPSI ஆகியவை,
உண்மையில், கழிவறையை சுத்தம்
செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம்
கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால், அதன் விற்பனை, இந்திய
பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
அப்போ, இந்தியாகாரன் எல்லாம்
இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke
குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும்
வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
____________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு
தெரிவித்துள்ளதா???
வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க
பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS,
மல்டோவா, PROTINEX
ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை,
இந்தியாவில் டெல்லியில் ALL INDIA
INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய
பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது,
நிலகடலையிளிருந்து எண்ணையை
பிரித்தெடுத்த பிறகு வரும்
கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது,
விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே,
ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________________________


உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு
தெரிவித்துள்ளதா???
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்
பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான
அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய
கணையத்தை மருத்துவர்கள் அறுத்து,
அகற்றி விட்டார்கள். அதன் பிறகு,
மருத்துவர்கள், அது கெட்டு போக கார
ணம்,
coke மற்றும் பெப்சி குடித்ததே என்று.
அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய
விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு
தெரிவித்துள்ளதா???
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631
என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது,
பன்றி, கோழி இறைச்சியில்
இருந்து தயாரிக்கபடுகிறது.
● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள்
உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில்
என்னென்ன கலந்திருக்கும் ?

E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 –
பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும்
எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான
வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம்.
அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ்,
குர்குரே மற்றும் மாகி (ஆமா,
ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற code
இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும்
தேடி பாருங்கள், இவை அனைத்துமே,
ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210,
E213, E214, E216, E234, E252, E270, E280,
E325, E326, E327, E334, E335, E336, E337,
E422, E430, E431, E432, E433, E434, E435,
E436, E440, E470, E471, E472, E473, E474,
E475, E476, E477, E478, E481, E482, E483,
E491, E492, E493, E494, E495, E542, E570,
E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள்,
உறவினர்களுக்கு பகிருங்க